மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமையும் போது சட்டப்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார்.
ஏற்கனவே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும், எதற்கு 3, 4 வார கால அவகாசங்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் பரிசீலித்து ஒப்புதல் அளிக்காவிடில், திமுகவின் போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.