பொறியியல் படிப்புகளுக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், இதுவரை 43 ஆயிரத்து 367 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சிறப்புப் பிரிவு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், வரும் 28 ஆம் தேதி இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 40 ஆயிரத்து 573 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பப்பதிவில் மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டிய போதிலும், கலந்தாய்வில் பெரும்பாலானோர் பங்கேற்காததால், நடப்பாண்டில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரம்பாத சூழல் ஏற்படும் நிலை உள்ளது.