முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் 28ம் தேதி, காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
பண்டிகை காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கொரோனா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், திரையரங்கு திறப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.