மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால அவகாசம் கோரியதை எப்படி வெளியே சொல்ல முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 63 சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளரகளிடம் பேசினார்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலக்கெடு கேட்டதை அமைச்சர்கள் மறைத்ததாக மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து அப்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கால அவகாசம் கோரியதை வெளியே சொல்ல முடியாது என்ற காரணத்தினால் தான், விரைவில் ஒப்புதல் என்ற வார்த்தையை குறிப்பிட்டதாக கூறினார்.