மன்னார் வளைகுடா கடல் பகுதி பாதுகாப்புக்காக கடற்படையின் அதிவேக ரோந்து கப்பல் விரைவில் வர உள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிவேக ரோந்து கப்பல் ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த கப்பல், குந்துகால் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகத்தின் ஒரு பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதற்காக குந்துகால் துறைமுக பகுதியில் இருந்து, குருசடை தீவு வரையிலான கடல் பகுதியில் உள்ள கடலின் ஆழம், நீரோட்ட வேகம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் இரவு-பகலாக இந்த அதிவேக கப்பல் ரோந்து பணியில் ஈடுபடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.