கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரியை வழிமறிந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடித்த கும்பலை தேடி தமிழக போலீசார் மத்தியப்பிரதேசேம் விரைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து 14 ஆயிரத்து 500 செல்போன்களை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலையில் வழிமறித்த மர்ம கும்பல், ஓட்டுநர்களை தாக்கி புதரில் கட்டிப்போட்டுவிட்டு செல்போன்களை திருடி சென்றது.
இது குறித்து 50 பேர் கொண்ட 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மர்மகும்பல், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.