புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அங்கு செல்கிறார்.
காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்லும் அவர், விராலிமலை சென்று உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையைப் பார்வையிட்ட பின்னர், ஜல்லிக்கட்டு சிலையைத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை பார்வையிடும் முதலமைச்சருக்கு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.