வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், வெங்காயம் பதுக்கப்பட்டதால், விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளதாகவும், தற்போது ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாய் வரை விற்கப் படுவதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிகாட்டி உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள் ளார். எனவே, இதற்குப் பிறகாவது வேளாண் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.