தமிழகத்தில் முதலீடுகளை உறுதி செய்யும் பொருட்டு முதலீட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகள் வழங்குதலை துரிதப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை அதிகாரக் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் 55 நிறுவனங்களுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு முதலீட்டு வசதிகளை மேம்படுத்தவும், அனுமதிகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் நிலை அதிகாரக்குழு சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூடி, ஆலோசித்தது.
இதனிடையே, தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து வரும் 28ம் தேதி சுகாதார அதிகாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.