ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ததையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது.
தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.