தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகும் என்றும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நடப்பு ஆண்டில், இதுவரை இந்திய - பசிபிக் கடற்பகுதியில் நிலவும் வெப்பநிலையால், தொடர்ந்து தென்மேற்கு திசையில் காற்று வீசுவதாக கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளால், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது