அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விளைந்தும் விலையில்லை எனும் அவலநிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல்மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.