மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி திரையரங்குகளை திறக்க அனுமதிக்குமாறு முதலமைச்சரிடம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறிய பின்னர், அவர்கள் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
கொரோனா காலகட்டத்தில் முடிந்து போன திரையரங்கு உரிமங்களை தானியங்கி முறையில் புதுப்பித்து ஆணை வழங்க வேண்டும் , காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பதிலளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர்.