முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாதம் 3 தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
வரும் 22 ஆம் தேதி புதுக்கோட்டைக்கும் 29 ஆம் தேதி தூத்துக்குடிக்கும் செல்லும் அவர் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோன கட்டுப்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறுநடுத்தர தொழிற்துறையினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார்.
29 ஆம் தேதி இரவு மதுரையில் தங்கிய பின், 30 ஆம் தேதி பசும்பொன் சென்று தமிழக அரசு சார்பில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்புகிறார்.