தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடைபெற்றது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தொடக்கி வைத்து ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.