டின்.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 2019-ல் நடந்த குரூப் 4, விஏஓ தேர்வு மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
துறை ரீதியான விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஊரடங்கு முன்பு வரை டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் 51 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இம்மாத தொடக்கத்தில் 20 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில், 97 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 40 பேரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.