திருவண்ணாமலை, பீமன் நீர்வீழ்ச்சியில், செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
வேலூரை சேர்ந்த உஸ்மான், தன் நண்பர்களுடன் ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்தார்.
நீர்வீழ்ச்சி அருகே தடுப்புகளை தாண்டி சென்று செல்பி எடுக்க முயன்ற போது, உஸ்மான், நிலைதடுமாறி பாறை மீது விழுந்தார்.
தலையில் படுகாயமடைந்த உஸ்மானை நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் தடுப்புகளைத் தாண்டிச் செல்வதை தடுக்க காவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.