தமிழக அரசு வெளிசந்தையில் 9,627 கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது.
கொரோனா காலத்திற்குப் பிறகு போதுமான நிதி இல்லாததால் இழப்பீடு வழங்க இயலாது என்பதை மத்திய அரசு தெரிவித்தது.
அதேவேளையில் இழப்பீட்டை சரிகட்டும் வகையில் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழக அரசு 9,627 கோடி ரூபாய் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது