தீபாவளி பண்டிகைக்கு 2000 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிறப்பு பேருந்துகளை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் எத்தனை என்பது முடிவு செய்யப்படும் என்றும், இந்த மாத இறுதியில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.