தமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், காக்கிநாடாவில் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெலங்கானாவுக்கு மேற்கு, வடமேற்கில் மணிக்கு 36 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, உள்கர்நாடகத்தின் வான்பரப்பில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தேனி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர்,தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னயில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி, மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது