தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று ஆளும் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனை சாவடி அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆளும் கட்சியான அதிமுக கூறியிருந்ததாக தெரிவித்த நீதிபதிகள், 2016 ஆம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2017,2018,2019 ஆம் ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? என்பது உள்ளிட்டவை குறித்து பதில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.