பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க 1989-ல் சட்டம் உருவாக்கப்பட்டாலும், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாமக்கல் அருகே இரு சிறுமிகள் 15 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதே ஒரே தீர்வாக இருக்கும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.