மதுரை பாலமேடு அருகே தகாத உறவை கைவிட மறுத்த மனைவியை மிரட்ட இரு மகன்களுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த கணவர் 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்த குமார் - உஷாராணி தம்பதி. இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன், சித்தார்த் என்ற இரு மகன்கள் உண்டு. உஷாராணி வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. கணவர் குமார் பல தடவை கண்டித்தும் கண்டுகொள்ளாத உஷாராணி தகாத உறவை கை விட மறுத்துள்ளார். மேலும், கணவரை பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்
இதனால், ஆத்திரமடைந்த குமார் கள்ள காதலை கைவிட மறுத்த உஷாராணியை மிரட்ட குமார் தனது இரு மகன்களுடன் கடந்த மாதம் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் கொடுக்கப்பட்ட கோப்பெருஞ்சோழன் , சித்தார்த் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். குமார் சிகிச்சைக்கு பிறகு, உயிர் பிழைத்தார் தொடர்ந்து , மருத்துவமனையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
இந்த நிலையில், மனைவி உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் இரு மகன்களை கொலை செய்த வழக்கில் குமாரை கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.