கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை முழு அளவில் தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர்கள் கூறுகையில், நடப்பு ஆண்டு முழு அளவிலான கிருஷ்ணா நீரை தமிழகம் பெறும் என்றனர். கண்டலேறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் முழு கொள்ளளவான 68.05 டி.எம்.சி.யை நீர்மட்டம் எட்டக்கூடும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதனால் சுமார் 8 டி.எம்.சி. தண்ணீரை திருப்பதி மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக திறந்துவிட முடிவு செய்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் 2021-ம் ஆண்டு மார்ச் வரை தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடக்கூடிய நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.