காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியில் இருந்து 25ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 22,969 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 98 புள்ளி 5 அடியாகவும், நீர் இருப்பு 62 டிஎம்சியாகவும் உள்ளன. அணையில் இருந்து பாசனத்துக்குக் காவிரியாற்றில் 16ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 950 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.