அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு இருந்த நிலையில், ஆசிரியர் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்டது.
இதனால் 50 வயதுக்கு பிறகு கூட தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.