கிராம சாலை மேம்பாட்டு பணிகளின் டெண்டர்களை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மனதார வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இ - டெண்டர் விடும் முறையை, அரசு இத்தோடு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 14வது நிதிக்குழு நிதியிலான, அனைத்துப் பணிகளையும் ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.