தமிழகத்தின் 7 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 9 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் 7 கல்லூரிகளும் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில், 119 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 91 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கான செலவினமாக 2021 மார்ச் வரையிலான கால கட்டத்துக்கு 9.72கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளுக்கு தேவையான மர பொருட்கள், புத்தகம், இயந்திரம் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தலா 36 லட்ச ரூபாய் ஒதுக்கி, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஆணை வெளியிட்டுள்ளார்.