தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூடிய விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து, அண்மையில் வீடு திரும்பினார். நேற்று இரவு அவர் மீண்டும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சையைத் தொடர்ந்து, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாகவும், கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.