தமிழ்மொழியின் மீது பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தி ஒருமைப்பாட்டை ஒழித்திட மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் கொண்டிருக்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியில் கூடத் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர், மின்வாரியத் தேர்வில் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.