மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி? என்றனர்.
தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்தாக குறிப்பிட்ட நீதிபதிகள், உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.
உதகை ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.