வானில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகே செவ்வாய்க்கிரகம் இன்று நள்ளிரவு வர இருப்பதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த மைய விஞ்ஞானி குமரவேல் அளித்த பேட்டியில், மாலை முதல் பூமிக்கு அருகே வரும்போதிலும், நள்ளிரவில்தான் மிக அருகில் வரும் என்றார். வானிலை சரியாக இருந்தால் வெறும் கண்ணால் அதை காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
2003ம் ஆண்டில் 57 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய்க்கிரகம் வந்ததாகவும், அதன்பிறகு இன்று 62 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வருவதாகவும், இதற்கடுத்து 2035ம் ஆண்டில்தான் வருமெனவும் குமரவேல் கூறினார்.