தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக, 30 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளதாக, பொது சுகாதாரத்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னர் இரண்டு கட்ட ஆய்வுகளை நடத்தியிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவலின் நிலையை கண்டறியும் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்திட்ட இயக்குநரகம் முடிவெடுத்துள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு புரதங்கள் உருவாகியுள்ளதா என கண்டறியும் ரத்த சீரம் ஆய்வுக்காக, வரும் வாரத்தில் 30 ஆயிரம் பேரிடம் இரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் கொரோனா பாதிப்பின் நிலை, அது அதிகரிக்கும் போக்கில் உள்ளதா, குறையும் போக்கில் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.