அட்மா (ATMA) எனப்படும் அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட ஊழியர்களை பணியிட மாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் அரங்கேறிய மோசடிகளை அடுத்து, அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டும் பலர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, வேளாண் துறையின் முதன்மை செயலாளர், வேளாண்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.