அதிமுக அவைத்தலைவர் என்ற பதவியில் இருந்து தன்னை யாராலும் மாற்ற முடியாது, எனக் கூறியுள்ள மதுசூதனன், முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து முடிவெடுத்த பின்னர், தனது கருத்தை கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு பற்றி தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி தான் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் மதுசூதனன் கூறியுள்ளார்.
அவைத்தலைவர் பதவி என்பது ஜெயலலிதா தனக்கு வழங்கியது என்றும், அந்தப் பொறுப்புக்கு வேறு சிலரை நியமிக்க சசிகலா முயன்றபோதுகூட அதை ஜெயலலிதா ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுசூதனன் சாகும் வரை அவர் தான் அவைத் தலைவர் என ஜெயலலிதா கூறியிப்பதாகவும், அப்பதவியில் இருந்து தான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு என்றும் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.