மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடைக்குமா என்பது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைப் பொறுத்து தான் இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில், "தேசிய தன்னார்வ ரத்த தான நாள்-2020" நிகழ்வில் ரத்த தான விழிப்புணர்வு பதாதைகளை வெளியிட்டு ரத்த பரிமாற்றம் குறித்த இணையவழி கருத்தரங்கை அவர் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.