கொரோனா சூழலிலும் தடை இல்லாமல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகப் பஞ்சாப் நேசனல் வங்கியின் மேலாண் இயக்குநர் மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
652 கடன் கணக்குகளில் இருந்து 93 ஆயிரம் கோடி ரூபாயைத் திரும்பப் பெற வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.