அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும்” என்ற “இறையாண்மை மிக்க ” உத்தரவாதத்தை மத்திய பா.ஜ.க. அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக்குரியது என கூறியுள்ளார்.
எனவே ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி, “ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்” “மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்" வாக்கெடுப்பு நடத்த ஆக்கபூர்வமாக வலியுறுத்தி - மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.