சேலம் அருகே திருமணிமுத்தாற்றில் மழையை பயன்படுத்தி சாயக்கழிவுகள் திறந்துவிடப்பட்டதால் தண்ணீர் நுரைபொங்க துர்நாற்றத்துடன் ஓடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிகளில் பெய்த கனமழையை சாதகமாக்கி சில சாய ஆலைகள் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீரை திறந்துவிட்டதாகக் சொல்லப்படுகிறது. இதனால், உத்தமசோழபுரம், பூலாவரி, ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் துர்நாற்றத்துடன், நுரை பொங்க ஓடுகிறது.
ஆண்டு தோறும் இந்த நிலை தொடருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், சிறிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பெரிய ஆலைகளை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.