தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவும் மருத்துவமனையில் இருந்து மாலையில் "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனதால், விஜயகாந்த், கடந்த 22 ஆம் தேதி, சென்னை - நந்தம்பாக்கம் "மியாட்" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து வைரஸ் தொற்று உறுதி ஆகி, பிரேமலதாவும் மருத்துவமனையில் சேர்ந்தார்.
இருவரும் மருத்துவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக மருத்துவ அறிக்கையில் கூறி யிருந்த மருத்துவமனை நிர்வாகம், உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.