சிவகங்கையில் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு காதல் பிரச்சனையே காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவபுரி பட்டியை சேர்ந்த 11 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மாணவி அதே ஊரைச்சேர்ந்த 16 வயது மாணவனை காதலித்ததும்,இதனையறிந்த பெற்றொர் மாணவியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவனுக்கும் மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்படவே மாணவியை அந்த மாணவன் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் மாயமான அந்த மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.