தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.