ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என புகார்கள் வந்ததை அடுத்து பாமாயில் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.