தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக டிஜிபி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு, முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் டிஜிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவுடிகளை ஒழிக்க, புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விரைவில் இது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அவர் கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புதிய மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.