துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் பாரா மெடிக்கல் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம்., பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் பதிவு செய்ய மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
வரும் 15 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும், பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.