தமிழ்நாட்டில், "ஒரே நாடு, ஒரே ரேசன்" திட்டம் நாளை தொடங்கப்படுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த அமைச்சர், ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இனி இருக்காது எனவும் உறுதிபட கூறியிருக்கிறார்.