திருப்பூர் அருகே ஆடு திருடிய 90's கிட்ஸ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லூரை சேர்ந்த விவசாயி பழனிசாமி தனது வீட்டின் முன்பாக தனது ஆட்டினை மேய்க்கவிட்டிருந்தார். மோட்டார்பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் ஆட்டை தூக்கி சென்றனர். பெருமாநல்லூர் நால்ரோட்டில் பகுதிக்கு வந்த போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக இருவரும் பதிலளித்தனர். இதையடுத்து, அவர்களை பெருமாநல்லூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட போது, ஊர் ஊராக சென்று ஆடு திருடி விற்பதை ஒப்புக் கொண்டனர். தைதானவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ஷாஜகான், சீனோய்பேபி என்பதும் இருவரும் பட்டதாரிகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து , அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. 8 000 மதிப்புள்ள ஆடு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.