தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம், நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
இதன் மூலம் பிற மாநில கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும்.
ரேஷனில், 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை கருவியைப் பொருத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பயோ மெட்ரிக் கருவியைப் பொருத்தும் பணியில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.