திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே தனது கோழியை பிடித்துச் சென்ற அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி, சந்தோஷ்குமார். சகோதரர்களான இவர்கள் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் வளர்த்து வந்த கோழியை அண்ணன் முனியாண்டி பிடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமார் கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்து குடல் சரிந்த முனியாண்டி உயிரிழந்தார்.