கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாததால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர் மருத்துவ சேவைகளால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
class="twitter-tweet">கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்-மியாட் மருத்துவமனை #Vijayakanth | #PremalathaVijayakanth https://t.co/heA0MEO2tQ
— Polimer News (@polimernews) September 29, 2020